
PAMAYAN
About Us
பாமயன்
பாமயன், இயற்பெயர் மு.பாலசுப்பிரமணியன். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் சுந்தரேசபுரத்தில் பிறந்தவர். தந்தை பெயர் முருகையா, தாயார் சுந்தரம்மாள். முதுகலை சமூகவியல் பட்டமும், இதழியல் பட்டயப் படிப்பும் படித்தவர்.
சுற்றுச்சூழல், இயற்கை வேளாண்மை. தமிழ் மெய்யியல் ஆகிய துறைகளில் தொடர்ச்சியாக ஆய்வுகள், பயிற்சிகள், எழுதுதல் ஆகியவை மேற்கொண்டு வருகிறார்.
சூழலிலல் பற்றிய
இயற்கை வேளாண்மை குறித்த களப்பணிகளை தொடர்ந்து ஆற்றி வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் சென்று பயிற்சிகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்தி வருகிறார். பல மாதிரிப் பண்ணைகளை உருவாக்கி உள்ளார். இயற்கை வேளாண்மைக்கான கொள்கை அறிக்கை உருவாக்கத்திற்கு மாதிரி அறிக்கை உருவாக்கித் தந்துள்ளார்.
பல இயற்கை வேளாண்மைக்கான இடுபொருள் கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளார். அவற்றை நூல்களாக வெளியிட்டும் உள்ளார்.
இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட உழவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார்.
தமிழ்நாடு தவிர ஒரிசா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களும் சென்று பயிற்சி கொடுத்துள்ளார்.
இலங்கையில் புதிய வெளிச்சம் என்ற அமைப்புடன் இணைந்து இயற்கை வேளாண்மை இயக்கத்தை உருவாக்கியதோடு அவர்களுக்குக் குழுவாகச் சென்று பயிற்சியளித்து வந்துள்ளார்.
மலேசிய உழவர்களுக்கு இயற்கை வேளாண்மைப் பயிற்சி அளித்துள்ளார்,
மலேசிய மாணவர்களுக்கு திணைக்கோட்பாடு பற்றிய கல்வித் திட்டத்தை வழங்கி உயிர்மை நேயம் என்ற கருத்தில் மாணவர்கள் செயல்வழிக் கற்றல் முறையைப் பின்பற்றி வருகின்றனர்.
சுவீடன், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இயற்கை வேளாண்மை குறித்த அனுபவப் பகிர்வைச் செய்து வந்துள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள சிக்காசோ நகரில் நடைபெற்ற உலகத் தமிழாராய்சி மாநாட்டில் பங்கு கொண்டு திணைக்கோட்பாடு பற்றிய கட்டுரை வழங்கி வந்துள்ளார்.
தமிழர்களின் தனிப்பெரும் மெய்யியல் கோட்பாடாக திணையியல் என்ற கோட்பாட்டை அறிவியல் முறையில் விளக்கி வருகிறார்.
தமிழில் சூழலியல் சொற்களஞ்சியம் என்ற ஆய்வுத் தொகுப்பை செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தில் செய்துள்ளார்.
பல ஆங்கில நூற்களை மொழி பெயர்ப்பு செய்துள்ளார்.
தமிழின் முதல் சுற்றுச்சூழல் இதழான புதிய கல்வி, ஒப்புரவு, ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
தற்பொழுது தாளாண்மை என்ற இதழின் ஆசிரியராக உள்ளார்.
பல்வேறு விருதுளை வாங்கியுள்ளார். மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் விருது, காந்தியடிகளுடன் பணியாற்றிய அன்னாசாகேப் சகரபுத்தே விருது, மொழி பெயர்ப்பாளர் விருது முதலிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
அடிசில், அடிசில் சோலை, பொதிகைச் சோலை முதலிய நிறுவனங்களை உருவாக்கியுள்ளார்.
பொதிகைச் சோலை வாழ்வூர் என்ற கூட்டுப் பண்ணைமுறையில் நூறு பேர்களை கூட்டாக இணைத்து நூறு ஏக்கர் பரப்பளவில் ஒரு மாதிரி சூழலியல் கிராமமாக உருவாக்கி வருகிறார்.

Our Story
Every website has a story, and your visitors want to hear yours. This space is a great opportunity to give a full background on who you are, what your team does, and what your site has to offer. Double click on the text box to start editing your content and make sure to add all the relevant details you want site visitors to know.
If you’re a business, talk about how you started and share your professional journey. Explain your core values, your commitment to customers, and how you stand out from the crowd. Add a photo, gallery, or video for even more engagement.
Our Clients










